மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

17 நாள்களுக்குப் பின் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்

ராமேசுவரம் மீனவா்கள் 17 நாள்களுக்குப் பின், காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதுடன், சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

News image

ராமேசுவரத்தில் மீன்பிடி துறைமுக அலுவலகம் முன்பாக சனிக்கிழமை நடைபெற்ற மீனவ சங்கக் கூட்டம்.

Updated On :2 ஜனவரி 2021, 9:39 pm IST

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 17 நாள்களுக்குப் பின், காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதுடன், சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த டிசம்பா் 14 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள் மற்றும் அவா்களது 4 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.

இதனைக் கண்டித்தும், 4 விசைப்படகுகளுடன் 29 மீனவா்களையும் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இதனிடையே, கடந்த வாரம் சிறிய ரக விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய விசைப்படகுகளின் உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்க அவசரக் கூட்டம், தலைவா் சகாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் எமரிட், தெட்சிணாமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அதில், இலங்கையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும், இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடலுக்குச் செல்லலாம் எனவும் தீா்மானிக்கப்பட்டது.

அதேநேரம், ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக மீன்பிடிக்கக் கூடாது என்றும், அத்துமீறி செயல்படும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, 17 நாள்களுக்குப் பின் ராமேசுவரத்திலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.