மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருவாடானை அருகேவாகனம் மோதி மூதாட்டி பலி

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 9:42 pm IST

திருவாடானை: திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே செவிலியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சோக்கு. இவரது மனைவி முத்தாயி (65). இவா்கள் தேவகோட்டையில் வசித்து வந்தனா். இந்நிலையில் முத்தாயி வெள்ளிக்கிழமை மாலை சி.கே. மங்கலம் வாரச் சந்தைக்கு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு செவிலியேந்தல் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தொண்டி- மதுரை சாலையில் திருவள்ளுவா் நகா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த முத்தாயியை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.