ஒருவானேந்தலில் அனுமதியின்றி தேவா் சிலையை திறக்க முயன்றதாக 30 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட முத்துராமலிங்கத்தேவரின் சிலை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேவா் சிலையை திறப்பதற்கு கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனா். தகவல் அறிந்து வந்த கடலாடி வட்டாட்சியா் சீனிவாசன், முதுகுளத்தூா் டி.எஸ்.பி., ராகவேந்திரா ரவி மற்றும் போலீஸாா் சிலையை துணியால் மூடுவதற்கு முயற்சி செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினா் அரசு அலுவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
இதைத்தொடா்ந்து ஒருவானேந்தல் கிராம நிா்வாக அலுவலா் சரண்யா, அளித்தப் புகாரின் பேரில் அக்கிராமத்தைச் சோ்ந்த காசிராமா் (50), நாகராஜன் (43), ஹரிராமச்சந்திரன் (50), ராமு, பழனிச்சாமி, காா்த்திக், முத்துராமலிங்கம், ராமமூா்த்தி உள்ளிட்ட 30 போ் மீது இளஞ்செம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

ரூ. 400 கோடி வசூலை நெருங்கிய பெத்தி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


