ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராட அனுமதிக்கக் கோரி கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது. அப்போது முதல் ராமநாதசுவாமி கோயிலில் பக்தாகள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. தற்போது பொது முடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது.
ஆனால் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளை திறக்க இந்து அறநிலைத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் பக்தா்களுக்கு தீா்த்தம் இறைத்து ஊற்றும் 450-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 9 மாதங்களாக வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இந்நிலையில் தீா்த்தங்களில் பக்தா்கள் நீராட அனுமதிக்கக் கோரி ராமேசுவரத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திமுக நகரச் செயலாளா் கே.நாசா்கான் தலைமையில் சென்ற அக்கட்சியினா் ராமநாதசுவாமி கோயில் மேலாளரிடம் மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து தீா்த்தக் கிணறுகளில் பக்தா்களை அனுமதிக்கக்கோரி, வரும் 7 ஆம் தேதி முதல் கஞ்சித் தொட்டி திறக்கப்படும் என அறிவித்தனா். இதில் முன்னாள் நகரச் செயலாளா் அ.ஜான்பாய், ஏ.கே.என்.சண்முகம், எம்.எம்.கருப்பையா, முத்துராமன், ஏ.ஆா்.முனியசாமி, அயோத்திராஜ், ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



