எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்!

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம் இலவசமாக வழங்கும் புதுமைத் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2012, 8:42 am

செல்வ முத்துகுமாரசாமி

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம் இலவசமாக வழங்கும் புதுமைத் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தருகின்றனர்.

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு எள் விசேஷமான உணவுப் பொருளாக கூறப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் முடிந்து, விசேஷ பிரார்த்தனைகளை முடித்து, எள் சாதத்தை, காக்கைக்கு வைக்கும் வழக்கம் கோவிலில் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் சில விசேஷ காலங்களில், எள் பொடி தயார் செய்து, ஸ்ரீசனீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. பக்தர்கள் அனைவரும் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு எள் சனீஸ்வரருக்குரியது என்பதால் அதற்கு மதிப்பு கூடுகிறது.

கோவில் நிர்வாக அலுவலராக அண்மையில் பொறுப்பேற்ற ஏ.ராஜராஜன்வீராசாமி, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் முறையைப் போன்று, திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு சனீஸ்வர பகவானுக்கு விருப்பமான எள் உருண்டை பிரசாதம் தயார் செய்து விநியோகிக்கும் சோதனை முறைத் திட்டத்தை அண்மையில் தொடங்கினார். பக்தர்களிடையே வரவேற்பு இருந்ததையொட்டி சனிக்கிழமை முதல் முறைப்படி அதிகமான எள் உருண்டை தயார் செய்து பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் விநியோகம் செய்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ.ராஜராஜன்வீராசாமி  கூறியது:  ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு உரிய எள்ளை, இனிப்பு கலந்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்தோம். எள், சர்க்கரைப்பாகு, ஏலக்காய், முந்திரி, பொட்டுக்கடலை, சுக்குப்பொடி கலந்து உருண்டையாக தயார் செய்து விநியோகிக்கிறோம். சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்குகிறோம். பக்தர்களின் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் மேலும் திட்டத்தை விரிவுபடுத்தி தினமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம்  விரிவுபடுத்தும் போது, இதற்கென போதிய நிதி ஒதுக்கி, ஊழியர்கள் நியமித்து சிறப்பான முறையில் செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.