ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி: பாடல் - 2

இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல் - பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:26 pm

தினமணி

(திரோதான சுத்தி)

அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் யெழவெழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்

திரணிரை மறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லேபள்ளி யெழுந்தருள் ளாயே!

விளக்கம்: இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல் - பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.

திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! திருவருட் செல்வத்தை அருள எழுந்தருளும் பேரின்ப மலையே! அலைகடலே! செங்கதிரோன் இந்திரன் திசையை - கீழ்த்திசையை அணுகினான். இருள் அகன்றது; உதய ஒளி எங்கும் பரவிற்று. நின் திருமுகத்தின் அருளைப்போலக் கதிரவன் ஒலி மேலுயர்ந்து வரவரத் தாமரைகள் மலர்கின்றன; வண்டுகள் ஒலிக்கின்றன. பள்ளியெழுந்தருள்க! திருவருளைத் தந்திடுக!

விளக்கவுரை: தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.