திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் நளபுரநாயகி திருக்கல்யாணம்


திருநள்ளாறு ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் பிரம்மோத்சவ நிறைவையொட்டி திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் வகையறாவை சேர்ந்தது ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோவில். இக்கோவிலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் தனி சன்னதிகொண்டுள்ளது பக்தர்களை ஈர்த்து வருகிறது.
இக்கோவிலில் பிரம்மோத்சவ விழா 5 -நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கி தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில், பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை ஸ்ரீ நளபுர நாயகி, ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.
முன்னதாக வரிசை எடுத்துவருதல், பரிச நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாண திருமாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமாங்கல்யம் கட்டும்போது, நிகழ்ச்சியில் கூடியிருந்த பக்தர்கள் அட்சதையை அவரவர் தலையில்போட்டுக்கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஊஞ்சல் சேவை, தேங்காய் உருட்டும் நலுங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, கோவில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன்வீராசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...