நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாளில்... அம்பாள் மகேஷ்வரி வழிபாடு!
நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
Updated on
1 min read

நவராத்திரி ஐந்தாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும், எண் ஜோதிடப்படி யாரெல்லாம் வணங்க வேண்டும், எந்த திசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் வணங்க வேண்டும், எந்த ஜாதக அமைப்பு உடையவர்கள் வணங்க வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம், மூல மந்திரம், காயத்ரி போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியது.

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்   
  அம்பாள்    மகேஷ்வரி


உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.

குணம்    சௌம்யம்

சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்

நைவேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30

மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11

பாட வேண்டிய ராகம்:   அடானா

யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்

விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
    போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :

[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com