/

பழனிக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

பழனிக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :17 நவம்பர் 2014, 11:59 am

என்.​ அங்​கு​பாபு

பழனிக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை சன்னதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள அருள்மிகு ஆனந்த வினாயகர் சன்னதி முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது. 

அருள்மிகு ஆனந்த வினாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பெரிய லட்டு வைக்கப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.  கார்த்திகை மாதத்தின் முதல்நாளில் சபரிமலையில் நடை திறப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்குவதால் மலைக்கோயில் ஆனந்தவினாயகர் சன்னதி, அடிவாரம் பாதவினாயகர் கோயில், திருஆவினன்குடி கோயில், அருள்மிகு பட்டத்துவினாயகர் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து துளசிமாலையணிந்து விரதத்தை துவக்கினர். 

பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் மாலையணிந்தனர்.    இதனால் காணும் இடமெல்லாம் கருப்புவேட்டி, நீலவேட்டி அணிந்த ஐயப்பசாமிகள் கூட்டமே அதிகமாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.