ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்
கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் வடபழனி முருகன் கோயில் அருகில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில்...


கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் வடபழனி முருகன் கோயில் அருகில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் மலஸ்தானத்தில் அம்மன் மார்பு அளவு தோற்றத்துடனும் முழு அம்மனாகவும் இருவித தோற்றத்துடனும் வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அலங்காரப்பிரியை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு கடந்த மாதம் ஜூலை 6-ம் தேதி ஆரம்பித்து 108 நாட்களுக்குத் தினசரி வெவ்வேறு விதமான அலங்காரத்துடன் சேவை நடைபெற்று வருகின்றது.
சிறப்பு அலங்காரமாக ஆக.,16-ம் தேதி ஆடிப்பூரத்தன்று ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல்கள் அணிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரம்மாண்டமான அலங்காரத்திற்குப் பக்தர்கள் வளையல்கள் வாங்கித்தரலாம் என்னும் இந்த அலங்காரத்தில் அன்னையைத் தரிசிப்பவர்களுக்கு மழலைப் பாக்கியம் கிட்டும் என்றும் ஆலய அர்ச்சகர் சங்கர் தெவிக்கின்றார். அலங்கார தொடர்புக்கு: 9884328777 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...