தில்லை திருப்பாற்கடல் திருக்குளம் திருப்பணி
சிதம்பரம் திருத்தலத்தில் வேங்கான் தெருவில் உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என சிறப்பித்து அழைக்கப்படுகிறது.


சிதம்பரம் திருத்தலத்தில் வேங்கான் தெருவில் உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என சிறப்பித்து அழைக்கப்படுகிறது. வியாக்ரபாத முனிவர் புதல்வன் உபமண்யுவிற்காக நடராஜப் பெருமானாலேயே உருவாக்கப்பட்டதாக புராண வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. இத்திருக்குளத்திற்கு பல்வேறு புலவர்கள், அறிஞர்கள் சிறப்பித்து பாடிய பன்னிரு (12) பாடல்கள் உள்ளன.
அதில் சேந்தனார் பாடல் மீண்டும் மீண்டும் பாடி இன்புறத்தக்கது.
பாடல்:
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
இத்தகைய சிறப்புக்குரிய திருப்பாற்கடல் திருக்குளம் தமிழக அரசின் சிறப்பு தன்னிறைவு திட்டம் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இறை அன்பர்களுக்கு அர்ப்பணிக்கும் விழா ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியுடன் பல்வேறு மடாதிபதிகள் முன்னிலையில், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு சிதம்பரம் இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...