/

சிவபெருமானால் தங்கிய வயிரவன் கோயில் கால பைரவர்: நன்கொடைகள் வரவேற்பு

திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஊர்களில் ஒன்று வைரவன் கோயில். இந்த பைரவரை பற்றி மிகவும் சிறப்பான வரலாறு உண்டு.

News image
Updated On :10 ஜூன் 2015, 7:32 am

எஸ். வெட்கட்ராமன்

திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஊர்களில் ஒன்று வைரவன் கோயில். இந்த பைரவரை பற்றி மிகவும் சிறப்பான வரலாறு உண்டு.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலையில் இருக்கும் முருகப் பெருமானிடம் 'ஓம்' என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசம் பெற சிவன் புறப்படுகிறார். மற்ற தெய்வங்களும் அவரோடு புறப்படுகிறார்கள். அப்போது அவர் பைரவரை மட்டும் வைரவன் கோயில் எனும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும் படி கட்டளையிட்டார்.

அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்ட பைரவர் வைரவன் கோயில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்குமுகமாக அமர்ந்தார். ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்தரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானமும் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இந்த பைரவர் எழுந்தருளியிருக்கிறார். பைரவரை ஸ்தாபித்து ஈசன் தங்கிய இடம் ஈசன்குடி பின்னாளில் ஈச்சங்குடியாயிற்று. இப்படி தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடியாகவும், கணபதியை பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும் கவிகளை கவித்தள (கபிஸ்தல)த்திலும், தேவியை உமையாள்புரத்திலும், நந்தியை நந்திமதகிலும், கங்கையை கங்காபுரத்திலும் ஸ்தாபித்தான் ஈசன். தான் மட்டும் தனியாக சுவாமிமலைக்கு சென்று முருகனிடம் உபதேசம் பெற்றார்.

சிவனால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஸ்ரீ காலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்தசாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரிசங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவையும் சிறப்புற நடைபெறுகிறது.

இந்த காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும். பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சளித்தொல்லை விலகும், இழந்த பொருள்கள் கிட்டும், பகை நீங்கும், காரியங்கள் வெற்றிகரமாக முடியும். இந்த பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும், ஞாயிறு வியாழக்கிழமை உச்சிக்காலத்திலும், வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத்தரும். தேய்பிறை அஷ்டமி தினத்தில் ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்தசாம பூஜையில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தரும்.

வயிரவன் கோயில் காலபைரவர் திருக்கோயில் சாலையில் உள்ளது. கோயிலும் மிகவும் சிறிய கோயில். தேய்பிறை அஷ்டமி தினத்தில் வருகை தரும் பக்தர்கள் பைரவருக்கு நடைபெறும் அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலாபிஷேகம், தீபாராதனை ஆகியனவற்றை கண்குளிர தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன போக்குவரத்தும் அதிகம் சாலையில் உள்ளதால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

வயிரவன் கோயில் கால பைரவர் கோயிலில் பிரதி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் ஹோமங்கள், அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை ஆகியவற்றை பக்தர்கள் நல்ல முறையில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தற்போதைய கோயிலின் பின்புறம் காலபைரவருக்கு புதிய திருக்கோயில் கட்டிட திருப்பணி நடைபெற்று வருகிறது.

கோயில் திருப்பணிக்கு நன்கொடைகள் வழங்கி திருப்பணி சிறப்புற நடைபெற்றிட மெய்யன்பர்கள் உதவிட வேண்டுகிறோம்.

திருப்பணி நன்கொடைகளை ஸ்ரீ காலபைரவர் வைரவன் கோயில் அன்னதான சேவா டிரஸ்ட், பதிவு எண் 88/2013 நிர்வாகிகளிடம் நேரில் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பணிக்கான நன்கொடைகளை ஸ்ரீ காலபைரவர் வைரவன்கோயில் அன்னதான சேவா டிரஸ்ட் என்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் நீதிமன்ற கிளையின் நடப்புக் கணக்கு எண் 179602000000112

IFSC No: IOBA0001796

M.I.C.R: 613020005 மூலம் வங்கியிலும் செலுத்தலாம்.

ஸ்ரீ காலபைரவர் வைரவன் கோயில் ஆலய திருப்பணி தடங்கலின்றி நடைபெற்றிட மெய்யன்பர்கள் நன்கொடை வழங்கி காலபைரவரின் திருவருள் பெற்றிட வேண்டுகிறோம்.

மேலும் தொடர்பு எண்: 99927 30013, 94427 67510, 98774 88252

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.