காஞ்சி சங்கர மடம் பீடாதிபதிகள் மயிலை விஜயம்
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும்....


காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும் சென்னை விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்றிரவு (மே 17)மயிலாப்பூர் வந்தடைந்தார்கள். ஜூன் 4-ம் தேதி வரை மயிலை சமஸ்கிருத கல்லூரியில் முகாமிடுகிறார்கள்.
ஸ்ரீ ஜயேந்திரர் சந்யாஸ ஆசிரமத்தை ஏற்று 62 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும், அவருடைய சதாபிஷேக ஜயந்தி மகோத்வசத்தை முன்னிட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த முகாமில் நடைபெற உள்ளது.
மேற்படி நாள்களில் தினசரி நிகழ்ச்சிகள் காலை 4 மணிக்குத் தொடங்கி ஸ்ரீ சுந்தர மௌளீஸ்வர பூஜை, கர்நாடக இன்னிசை, சம்ப்ரதாய பஜனை, உபன்யாஸம், வேத சம்மேளனம் போன்றவைகள் ஏற்பாடாகியுள்ளது. ஜூன் 2-ம் தேதி காஞ்சி மகா சுவாமிகளின் ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு வேதபாராயணங்கள், ஹோமங்கள் சுவாஸினி பூஜைகள் போன்ற நிகழ்ச்சிகள் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஆஸ்திக சமாஜ வளாகத்தில் நடைபெறுகின்றது.
ஜூன் 3-ம் தேதி இரவு ஸ்ரீ மகாசுவாமிகளின் பஞ்சலோக விக்ரக திருமேனி மற்றும் அவரது படம் அவரால் உபயோகப்படுத்தப்பட்ட மேனா என்று சொல்லப்படும் பல்லக்கில் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு வேத கோஷங்களுடனும், பாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகளுடனும் மயிலை வீதிகளில் ஊர்வலமாக வந்து புஷ்பாஞ்சலியுடன் விழா பூர்த்தியாகின்றது.
மேலும் தகவல்கள் அறிய தொலைபேசி 044-24994232 மற்றும் 24987676-ஐ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...