ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமைப் பெருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் 436ஆவது மகிமைப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் 436ஆவது மகிமைப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 மணப்பாடு கடற்கரையோரம் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மேல் அமைந்துள்ளது திருச்சிலுவை திருத்தலம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் மகிமைப் பெருவிழா, நிகழாண்டு செப். 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலையில் பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை திருத்தலத்திலும் திருப்பலி, நவநாள் திருப்பலி, மாலையில் பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஞாயிற்றுக்கிழமை (செப். 13) மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலி, ஐந்து திருக்காய சபையினர் பவனி ஆகியன நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. மணவை மறை மாவட்ட முதன்மை குரு சகாயம் தலைமை வகித்தார். இதில் தமிழகம், கேரளம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். முக்கியத் திருவிழாவான திருச்சிலுவை மகிமைப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பலிகள், 5 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், 6 மணிக்கு திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையினர் பவனியைத் தொடர்ந்து பெருவிழா திருப்பலி நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவைக்கு முத்தம் செய்யப்படல் ஆகியன நடைபெற்றது. 5.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது.
 இதில் அருள்பணியாளர்கள் டேவிட் மைக்கேல், கிங்ஸ்லி, ஜெகன், ஸ்டார்வின், ஆண்டனி ஜெகதீஷ், ஜேம்ஸ் பீட்டர், ரொனால்டு ரெக்ஸ், ஜோசப் ராஜேஷ் ஆகியோர் மறையுரை வழங்கினர்.
 விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள் இருதயராஜ் பர்னாந்து, கிங்ஸ்லி, ஆலய ஆன்மகுரு தெயோபிலஸ், மணப்பாடு அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.