கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வர ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம்

தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு தென்கரையில் 10-வது திருத்தலமாகத் திகழ்வது திருவாலம்பொழில் அருள்மிகு ஞானம்பிகை..

Updated On :3 ஜூன் 2017, 11:43 am

தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு தென்கரையில் 10-வது திருத்தலமாகத் திகழ்வது திருவாலம்பொழில் அருள்மிகு ஞானம்பிகை உடனுறை அருள்மிகு ஆத்மநாதேஸ்வர ஸ்வாமி (வடமூலேஸ்வரர்) ஆலயம். தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து தென் மேற்கே 5 கி.மீ தூரத்தில் குடமுருட்டியாற்றின் கரையில் உள்ளது. ஒரு காலத்தில் ஆலமரங்கள் சூழ்ந்த காட்டில் இறைவன்

அருள்பாலித்ததால் வடாரண்யேஸ்வரர் என்று இறைவனுக்குத் திருநாமம். வழிபடுவோருக்கு ஞானத்தை வழங்கி கல்வி கேள்விகளில் சிறந்திட வைக்கும். அம்பிகை என்பதால் ஸ்ரீ ஞானாம்பிகை என்று அம்மனுக்கு பெயர். சூரியன், அஷ்ட வசுக்கள் பூஜித்து பேறு பெற்ற தலம். திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், சுந்தர மூர்த்தி சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலம் மக நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷ பரிகாரத்தலமாகும்.

இத்திருக்கோயிலில் திருப்பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூன் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகின்றது. இவ்வைபவத்தில் பல்வேறு மடாதிபதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். யாகசாலை பூஜைகள் வெள்ளியன்று துவங்கியது.

-எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.