மக்களே உஷார்: ஜூன் 18-ல் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசிக்க முடியாதாம்!
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 18-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதால், அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


உடுப்பி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூன் 18-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதால், அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைப்பதற்காக குடியரசுத் தலைவர் இன்று பெங்களூரு வருகிறார். இந்நிலையில், இன்று மாலை 5.00 மணியளவில் விழாவில் பங்கேற்றும் அவர், ஜூன் 18-ம் தேதி மாலை 4.00 மணியளவில் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை தாய் மூகாம்பிகை கோயிலுக்குள் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கோயிலை சுற்றிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...