சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றி அறியாத ரகசியங்கள்!

சிதம்பரத்தில் எல்லோரும் அறியத் துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்தக் கோயிலில்.
சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றி அறியாத ரகசியங்கள்!
Published on
Updated on
2 min read

சிதம்பரத்தில் எல்லோரும் அறியத் துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்தக் கோயிலில். அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் மட்டுமல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக்கோயில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சிலைக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அப்படி என்ன ஒற்றுமை உள்ளது எனப் பார்ப்போம்...

பூமத்தி ரேகையின் மையம்
ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

உச்சக்கட்ட அதிசயம்
பஞ்சபூத கோயிகளில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி 41 கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

மனித தோற்றம்
மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.

மூச்சுக்காற்றைக் குறிக்கும்
விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்குச் சராசரியாக 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது.

நாடிகள்
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத்
தெரியாத உடலின் பல பாகங்களுக்குச் சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

ஐந்து படிகள்
பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகளை பஞ்சாட்சர படி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது சி.வா.ய.ந.ம என்ற ஐந்து எழுத்தே அது.

நான்கு வேதங்கள்
கனகசபை பிற கோயிலிகளில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்தக் கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது நான்கு வேதங்களைக் குறிக்கின்றது.

ஆயக்கலைகள்
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும் சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளைக் கொண்டுள்ளது. இந்த 64 கலைகளைக் குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றது.

பொற் கூரை
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள் 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

தாண்டவம்
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலத்தில் கால் பெருவிரல் இருப்பது பூமியின் ஈர்ப்பு மையத்தில் உள்ளது.

தீர்த்தங்கள்
சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோயிலில் அமைந்துள்ளன.

கோபுரங்கள்
இக்கோயிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். இக்கோயிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இவையே, தில்லை நடராஜர் கோவிலின் அறிந்திடாத அபூர்வ தகவல்கள். இந்த அறிய தகவலைப் படித்து அனைவருக்கும் பகிருங்கள்......அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com