பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும்.
பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்!
Published on
Updated on
2 min read

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும். 

சூரிய பகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும். எல்லோரும் எதிர்ப்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் என சொல்ல கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்ப்பார்த்து காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்ககூடிய அயண மாதங்களாகும்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாத பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு. 

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி சமயத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்து கொள்ள வேண்டும்.

மகர என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையை குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைபிடித்த நேரங்களை நாமும் கடைபிடித்தால் நன்மை கிட்டும்.

தற்போது வரும் தை 1-ம் தேதி (14.01.2018) ஞாயிற்றுக்கிழமை மாத பிறப்பு ஏற்படுகிறது. 

இந்த ஆண்டு எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது?

தை 1ம் தேதி (14.01.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11.00 முதல் 12.00 மணிக்கு குரு ஹோரையில் வைக்கலாம். 

உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாத பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com