Enable Javscript for better performance
Yoga for anyone this week?- Dinamani

சுடச்சுட

    

    இந்த வாரம் (ஏப்ரல் 3 - 9) யாருக்கு யோகம்?

    Published on : 04th April 2020 04:57 PM  |   அ+அ அ-   |    |  

    astrology-

     

    12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 3 - ஏப்ரல் 9) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

    மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    வேலைத்தொந்தரவுகள் இருக்கும். குடும்பத்தில் சுமுகநிலை பாதிக்கப்படும் சூழலும் உருவாகும். பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் உருவாகி வருமானமும் சற்று இறங்குமுகமாகத்தான் இருக்கும். நண்பர்களுக்கு உதவும் சூழ்நிலை காணப்படும்.

    உத்தியோகஸ்தர்கள் அனைவருடனும் சுமுகமாக பழகவும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழில் சற்று மந்தமாகவே காணப்படும். விற்பனையும் உற்பத்திப்பொருள்களின் வரவும் குறைந்திருக்கும். விவசாயிகளின் கையிருப்புப் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடைகளால் சில சமாளிக்கும்படியான செலவுகளும் ஏற்படும்.

    அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதில் நிம்மதி காண்பார்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தினரின் நலனுக்காகவும் அனைவரது ஆரோக்கியத்துக்காகவும் கவனத்தைச் செலுத்துவார்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    பரிகாரம்: கணேசரையும் துர்க்கையையும் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 3, 4. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    நீண்ட நாள்களாக வேலை இடங்களில் இருந்துவந்த பிரச்னைகள் விலகி விடும். கடன் பிரச்னைகள் சற்று குறையும். குடும்பத்தில் சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

    உத்தியோகஸ்தர்கள் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய காலம் இது. பேச்சில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்படுவீர்கள். சங்கடங்கள் சூழாது. வியாபாரத்தில் கவனத்துடன் ஈடுபடவும்.

    விவசாயிகளுக்கு புதிய சிக்கல்கள் உருவாகும். அதிக செலவுகள் செய்து புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டாம்.

    அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் கண்காணிக்கும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வார்த்தைகளிலும் நிதானம் தேவை. கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வெளியூர் பயணத்தைத் தவிர்த்திடுங்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவும் சீராக இருக்கும். இருந்தாலும் சிக்கனத்தைக் கையாளவும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

    பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் உகந்தது. அனுகூலமான தினங்கள்: 4, 5. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    வேலைகளை எப்பாடுபட்டாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். திறமை பளிச்சிடும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும். வேலையில் கவனம் செலுத்துவும். சக ஊழியர்களும் உதவ முன்வருவார்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் சற்று தாமதத்துடன் வந்து சேரும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். விவசாயப்பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் அனைத்தும் நல்லபடியாகவே முடியும்.

    அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினரின் திறமைகளுக்கு சவால்கள் உண்டாகலாம். எல்லா விஷயங்களிலும் முத்திரை பதிக்க முயற்சிகள் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் வருமானம் சீராகவே இருக்கும். பிரயாணங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் சொல்படி கேட்டு நடக்கவும்.

    பரிகாரம்: ஆஞ்சநேயப்பெருமானை தரிசியுங்கள். அனுகூலமான தினங்கள்: 3, 6. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    திட்டமிட்டபடி காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும். பொருளாதாரம் சற்று இறங்குமுகமாகவே இருக்கும். வழக்கு விஷயங்களும் இழுப்பறியாக இருக்கும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷங்கள் சீராக இருக்கும். புதிய யுக்திகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள்.

    அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெற முடியாது. கலைத்துறையினர் புதிய வடிவத்தில் படைப்புகளை மக்களிடம் கொண்டு சென்று பாராட்டுகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரிடம் எதிா்பார்த்த அதரவு கிடைக்கும்.

    பரிகாரம்: சூரியபகவானை சூரியநமஸ்காரம் செய்து வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 4, 6. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

    மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி தேடி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செய்ய நேரிடும். இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும்.

    உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சிரத்தையுடன் செயல்படவும். மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். லாபத்தால் மனம் திருப்தி அடையும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தாற்போல் லாபத்தை நிா்ணத்து செயல்படவும்.

    அரசியல்வாதிகள் சற்று எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். கட்சி மேலிடம் உங்களை கண்காணிக்கும். பேச்சில் கண்ணியம் காக்கவும். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பலனை அடைவார்கள். வரவேற்புகள் குறைவதைப் பற்றி கவலை வேண்டாம். பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்துகொள்வார்கள். பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

    பரிகாரம்: திருவரங்கநாதரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 4, 7. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

    பொருளாதாரத்தில் சிறிய தொய்வுகள் இருக்கும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்காது. எவருக்கும் நீங்களாக அறிவுரைகள் வழங்க வேண்டாம். இதனால் வீண் அபவாதங்கள் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு குறைந்த பலனும் அதிக உழைப்பும் செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு சற்று குறையும். வியாபாரிகள் பலவிதங்களில் முயற்சி செய்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைப்பது அரிது. விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து காணப்படும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம்.

    அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றியடையும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுக்க கடுமையாக உழைப்பீர்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வரவேற்புகளைப் பெறுவார்கள். நட்புகளால் சந்தோஷம் கிட்டும். பெண்மணிகள் பொருளாதார வளர்ச்சியில் திருப்தி அடைவார்கள். கணவருடன் ஒற்றுமை காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் பத்திரமாக ஈடுபடவும்.

    பரிகாரம்: அம்பிகையை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 7, 8. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

    பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் தேவையான பொருள்கள் கிடைக்கும். தடைகற்களை படிக்கற்களாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வரவேண்டிய பணம் தாமதமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கூட்டாளிகளிடம் சற்று கவனம் தேவை. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் பாராமரிப்பு அவசியம்.

    அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கொடுத்த பொறுப்புகளை கவனத்துடன் முடிக்கவும். நாவடக்கம் சற்று அவசியம். கலைத்துறையினரின் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகவே அமையும். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

    பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும் . அனுகூலமான தினங்கள்: 5, 8. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

    பெரிய திருப்பங்கள் ஏற்படாவிட்டாலும் செயல்கள் நன்றாகவே முடியும். பண வரவு சற்று நிதானமாக இருக்கும். பெரியோர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சத்தான ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் அவற்றை செவ்வனே செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் கொள்முதல் லாபங்களைக் காண்பார்கள். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும். விவசாயிகளுக்கு விளைசச்ல் குறையும். நிலத்தகராறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.

    அரசியல்வாதிகளுக்கு கட்சிப்பணிகளில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினர் சில்லறை செலவுகளை செய்ய நேரிடும். சக கலைஞர்களின் உதவியால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.

    பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் சொல்லி முருகப்பெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 6, 7. சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

    மனதில் பல புதிய எண்ணங்கள் வந்து போகும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் கூடுதலாக இருக்கும். வேலையில் நிம்மதி குறைந்து அதிகம் உழைக்கவும் வேண்டியிருக்கும். சிக்கனத்தைக் கையாளவும்.

    உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் கடினமான வேலைகளையும் முடித்து விடுவார்கள். பணவரவு சீராகவே இருக்கும். வியாபாரிகள் சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். கூட்டாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். விவசாயிகள் புதிய சாதனங்கள் எதுவும் வாங்கக்கூடிய தருணம் இது அல்ல. விளைச்சலைப் பெருக்கி லாபம் அடைவீர்கள்.

    அரசியல்வாதிகள் கடந்த கால உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொண்டர்களும் உடனுக்குடன் சொல்லும் பணிகளைச் செய்து முடிப்பார்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் பெரியோரின் ஆசியுடன் திட்டமிட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். கணவரின் உதவியுடன் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

    பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயரையும் சனீஸ்வரரையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 7, 8. சந்திராஷ்டமம்: 3, 4.

    {pagination-pagination}

    மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். செய்தொழில் சுமாராக இருக்கும். உறவினர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள். வழக்கு விவகாரங்கள் இழுப்பறியாக இருக்கும். சிக்கனத்தை கையாளவும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் இழுப்பறியாகத்தான் இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு தொடரும். வெளியூர் செல்ல கிடைத்த வாய்ப்புகள் தள்ளிப்போகும். வியாபாரிகளுக்கு லாபம் சற்று குறைவாகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் நல்ல வருமானம் காண்பார்கள். நீர்ப்பாசன வாய்ப்புகள் அதிகரிப்பதால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து மேலும் லாபத்தைப் பெருக்கிக் கொள்ளவும்.

    அரசியல்வாதிகளின் ரகசிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கட்சி மேலிடம் புதிய பதவிகளை வழங்குவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு சற்று காலதாமதம் ஆகலாம். பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் காண்பார்கள். வீட்டில் வயதானவர்களை அக்கறையுடன் கவனிக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

    பரிகாரம்: நரசிம்மமூர்த்தியை வழிபட்டு லரவும். அனுகூலமான தினங்கள்: 5, 9. சந்திராஷ்டமம்: 5, 6.

    {pagination-pagination}

    கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

    மனதில் சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரம் மோசமான நிலைமையில் இருக்கும். ஆன்மிகத்தில் மிக அதிகமான ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். மன பலம் கூடும். விரயங்களை அதிகரிக்கும்.

    உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமுகமாக பழகவும். வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவதில் சிறு தடங்கல்கள் ஏற்படும். குத்தகை எடுப்பதை தற்சமயம் தவிர்த்திடலாம்.

    அரசியல்வாதிகள் கட்சியில் மாறறங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்போதுள்ள நிலைமையில் கட்சி மேலிடத்தின் பேச்சை மதித்து நடக்கவும். கலைத்துறையினர் ரசிகர்களின்ஆதரவுடன் திட்டங்களைச் செயல்படுத்தி புகழ் பெறுவார்கள். பெண்மணிகள் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து காரியமாற்றுங்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை விளக்கேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 5, 9. சந்திராஷ்டமம்: 7, 8.

    {pagination-pagination}

    மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

    பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். திட்டமிட்ட செயல்களில் சிறிது தொய்வு உண்டாகும். உங்கள் தகுதி உயரும். உடல்ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

    உத்தியோகஸ்தர்கள் சீராகப் பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு முயற்சியின் அளவுக்கு ஏற்பவே லாபம் உண்டாகும். புதிய கடன்கள் வாங்க நேரிடலாம். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட வேலைகளில் தொய்வு ஏற்படும். பணியாளர்கள் கிடைக்கச் சிரமப்படுவீர்கள்.

    அரசியல்வாதிகள் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பு கிட்டும். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலைமை தென்படும். பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல உயரம் எட்ட தகுந்த உழைப்பைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகள் செய்து உடல் வலிமை பெற்றிடுங்கள்.

    பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 7, 8. சந்திராஷ்டமம்: 9.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai