செல்வ வளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர்

கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையைக் கொண்டாடும் நாளில், செல்வ வளத்தைப் பெருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.
குழந்தை கிருஷ்ணன்
குழந்தை கிருஷ்ணன்
Published on
Updated on
2 min read

உலகத்தைக் காத்து ரட்சிப்பது இறைவன் என்ற மாபெரும் சக்தி. காப்பதும் அந்த இறைவன்தான். அழிப்பதும் அந்த இறைவன்தான். அப்படிப்பட்ட இறைவனில், பரமாத்மாவான ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். மேலும், மகாபாரதப் போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை என்ற அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம்முடைய மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்திப் பண்டிகையைக் கொண்டாடும் நாளில், செல்வ வளத்தைப் பெருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். கம்சன் என்ற அரக்கன், தனது தங்கைக்குப் பிறக்கும் 8 ஆவது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி - வசுதேவரைச் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்று வந்தான். கம்சனிடமிருந்து தப்பித்து 8 ஆவதாக பிறந்த, இல்லையில்லை அவதரித்த, கிருஷ்ணரைக் காப்பாற்ற, யமுனை நதியைக் கடந்து, கிருஷ்ணரை வசுதேவர், கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபர் - யசோதையிடம் கொண்டு போய் சேர்த்தனர்.
 
கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர், பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும், அரக்கன் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரதப் போர் என கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டே சென்றன.

கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு  11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரமானது ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.39 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 9.44க்கு நிறைவடைகிறது.

புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளான அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிதான் தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.  அதே வேளை ஸ்ரீ கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால், வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரங்களை செய்கின்றனர். இதுதான் வட இந்தியர்களின் வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு  11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, ஆகஸ்ட் 30ஆம் தேதி எமகண்டம், குளிகை, ராகு காலம் உள்ளிட்ட பொருத்தமற்ற நேரங்களைத் தவிர்த்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் பூஜைகள் செய்யலாம். குறிப்பாக, நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உத்தமமான நேரமாகும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து இனிப்பு பலகாரங்களும் பிடிக்கும். அதனால், அவரவர்களுக்கு முடிந்த அளவுக்கு இனிப்புகளைச் செய்து வழிபட வேண்டும். வெண்ணெய் அவசியம் பூஜையில் இருக்க வேண்டும். அதே போல், குசேலனின் உண்மையான அன்பை, அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால், எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லையே, என்று கலங்கும் நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையில், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் வைத்தாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக்கொள்வார். கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த அற்புதமான தினத்தில், ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்து உண்ணா நோன்பு இருந்து, அவரது திருநாமங்களை உச்சரிக்கலாம்.

கிருஷ்ணரின் பாடல்களை பஜனையாகப் பாடி வழிப்படுவதும் சிறந்தது. கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம். தம்மால் முடிந்த அனைத்துவித இனிப்புகள் மற்றும் முறுக்கு, எள்ளடை போன்ற பலகாரங்களையும், அவல் மற்றும் வெல்லத்தால் கலந்து செய்யப்பட்ட இனிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பூஜை அறையில் வாழை இலையில் வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் கால்களை, மாக்கோல மாவில் வைத்து, வாசலில் இருந்து, பூஜையறை வரையிலும் பாதத்தைப் பதிய வைக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணரே, வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பொங்கும். தொடர்ந்து, படையிலிட்டு அக்கம், பக்கத்தினர் என சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வோம்.

சோ. தெஷ்ணாமூர்த்தி, கூத்தாநல்லூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com