உடல் எடை குறைக்க - ஜோதிட சூட்சுமங்களும் பரிகாரமும்!

ஜோதிட ஆராய்ச்சியில் ஒருவரின் உடல் பருமனாக இருக்க கிரகங்களோடு பாவங்களும் முக்கியத்துவம் பெறுகிறது.
உடல் எடை குறைக்க - ஜோதிட சூட்சுமங்களும் பரிகாரமும்!


ஒரு மனிதன் என்றும் இளமையாக, திடமாக, ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்பு, சர்க்கரை  சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும்.

முக்கியமாக இவற்றில் கெட்ட கொழுப்பை அதிக்கப்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணுவதால் உடல் பருமன் கூடும். உடல் எடை கூடுவதால் மனம் மற்றும் உடலில் சுலபமாக நோயின் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் ஒருவர் எந்த செயலையும் சீராக செய்ய முடியாது. ஆண்களை விட பெண்களுக்குகே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுத்தும். உடலில் முக்கியமாகப் பெருத்த வயிறு என்பது நோயின் தாக்கம் அதிகமாகும்.

ஜோதிட ஆராய்ச்சியில் ஒருவரின் உடல் பருமனாக இருக்க கிரகங்களோடு பாவங்களையும் பார்ப்போம். உடல்வாகு, நிறம், குணம் அனைத்தும் லக்கினாதிபதி மற்றும் அங்குள்ள கிரகங்களைக் கொண்டு சொல்லப்படும். அவற்றில் உடல் என்று கூறப்படும் சந்திரன் அதி முக்கியமாகும். இந்த பிரபஞ்சத்தில் சந்திரன், சுக்கிரன் ராகுவின் கலியாட்டத்தில் ஒருவருக்கு பேராசை, பணம் மற்றும் ஆடம்பர மோகத்தில் உடலின் ஆரோக்கியத்தைத் தவற விட்டுவிடுகிறோம். இலை போட்டு நிதானமாக வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடும் காலம் போய், நின்றபடியே பரோட்டா, பர்கர், பக்கெட் பிரியாணி, பானிபூரி என்று காலம் தவறி சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது.  

இந்த கலிகாலத்தில் சிலசமயம் ஜாதகரின் கிரகங்களின் செயலையே திணற வைக்கிறது. ஒருசிலரே தங்கள் உடல் சீராக இருக்க BMI (உடல் நிறை குறியீட்டெண்), சரியான முறையில் வைத்திருப்பார்கள். ஜாதகத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாலும் இடத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் உடல் பருமனாக மாறுபடும். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் பருமனை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். இது அவரவர் தசை புத்திக்கு ஏற்ப மாறுபடும். குரு எங்கு தொடர்பு கொள்ளுகிறாரோ அங்கு உள்ள பாவ அடிப்படையில் அந்த பாகம் மட்டும் பெருத்துக் காணப்படும். 

ஓபிசிட்டி எதனால் என்று ஆராயும்பொழுது ஒரே நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்து வேலை செய்வது, உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, மரபணு முறைப்படி, திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்படுகிறது. நீர் கிரகங்களான சந்திரன் சுக்கிரன் மற்றும், குரு (கொழுப்பு கிரகம்) அவற்றோடு ராகு சேரும்பொழுது அதிகப்படியான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தும். பஞ்ச பூதத்தில் உள்ளடங்கிய நீர் மற்றும் ஆகாய தத்துவ கிரகங்களின் காரகத்துவத்தை கட்டுப்படுத்தினால் உடலின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு ஏற்ப வெப்ப கிரகங்களான சூரியன் செவ்வாயின் உஷ்ணத்தால் நீர் வெளியேறும்பொழுது உடல் எடை குறைக்கப்படலாம். அதாவது சூட்டு தன்மை கொண்ட உணவு வகைகளுடன், பச்சைக் காய்கறிகள், நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள், இயற்கை சர்க்கரை கொண்ட காய்கறிகளை உட்கொள்ளலாம்.

உடல் கட்டுக்கோப்பாக இருக்க சனி மற்றும் கேது கிரக செயல்களும் உதவியாக இருப்பார்கள். அதாவது இரும்பு பொருள்களை கொண்டு உடற்பயிற்சி, தியானம்/யோகா, சமபங்கு தூக்கம் என்று அனைத்து செயல்களுடன் உணவுப் பொருள்களில் கொழுப்பு மற்றும் அடர் மாமிச உணவைக் கட்டுப்படுத்துவது நன்று. கேது என்பவர் ஆன்மீகவாதி. அவர் கோசாரத்திலோ, தசை புத்தியிலோ வந்தால் உணவை சரிவர உண்ணமாட்டார்கள். சிலநேரம் தன்னையே மறக்கும் அளவு மனதைக் கொண்டுபோவார்கள். கேதுவிற்கு ஏற்ற கொள்ளு உணவைச் சாப்பிடுவது உடலின் பருமனைக் குறைக்க வல்லது.

சந்திரன் என்று சொல்லப்படும் அரிசியில் அதிக  கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. அவற்றை மூன்று வேலையும் சாப்பிடக்கூடாது. அது உடல் பருமனையும் சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உடலைக் குறைக்கும் உணவாக இருக்கும் புரதம் நார்ச்சத்து கொண்ட பழம் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். சந்திரன் என்பவர் உடல் அவரின் காரணியான அரிசி, பால், உப்பு போன்ற வெள்ளை பொருள்களை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

குரு எந்த பாவத்தில் இருப்பார் என்று பார்க்க வேண்டும். அந்த பாவத்தில் உள்ள உடல் பாகம் கொஞ்சம் பருமனாக இருக்கும். கோசார ராகு என்பவர் லக்கினத்தோடு தொடர்புகொள்ளும் பொழுது உடல் வாகு பருமனாகும். அது யாரால் என்று அங்குள்ள கிரகம் மற்றும் தசையைப் பொறுத்து அமையும். எடுத்துக்காட்டாக செவ்வாய் என்றால் நோயால் என்றும், குரு என்றால் குழந்தையால் அல்லது கொலஸ்ட்ரால் பாதிக்கப்படுவர் என்று ஜோதிட நுண் ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது.

உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியே செல்ல, சனி என்ற கடின உழைப்பு அவசியம் தேவை. உழைப்பு என்பது அலுவலக வேலை மற்றும் நாம் செய்யும் அனைத்து செயலையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக வீட்டில் கோலம் போடுவது, அம்மியில் அரைப்பது, கீழே அமர்ந்து சாப்பிடுவது, முடிந்தவரை நடந்து செல்லுவது. ஒருவர் தினமும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுவது, சூடான நீர் மற்றும் சூடான உணவுகளை உட்கொள்ளுவது, காப்பர் பாத்திரத்தில் நீர் குடிப்பது. உடலில் சேர்ந்து கிடந்த தேவையற்ற நச்சுத் தன்மைகளை வெளியேற்ற நம் முன்னோர்கள் சொன்ன பானங்களைக் குடிப்பது, நம் உடலைப் பெருக்கவிடாமல் செய்யும். காலகாலமாக நம் முன்னோர்கள் வழியில் மாதத்திற்கு ஒருமுறையாவது உபவாசம் இருப்பார்கள். அன்றைய நாள் கடவுளுக்குப் படைத்த பிரசாதங்களான இனிப்பு, பால், பழங்களை அன்றைய பொழுது சாப்பிடுவது வழக்கம். இது உடலின் செயல்பாட்டைச் சீராக வைக்க உதவும்.

சிலருக்கு பலகாலமாக உடம்பு ஊதிக் கொண்டே இருக்கும் அது உடலில் அசாதாரணமான நோயின் தாக்கம் (abnormal disease) ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக தைராய்டு இருந்தாலும் உடலில் மாற்றங்கள் ஏற்படும். உணவு மற்றும் உடம்பில் மாறும் சக்தி என்பது 2ம் பாவம் ஆகும். இங்கு பாவிகளின் கூட்டு தென்பட்டால் தேவையற்ற ஆரோக்கியம் அற்ற உணவு உண்ணும் எண்ணம் ஏற்படுத்தும். உணவு முறை கட்டுப்படாத பட்சத்தில் நல்ல ஆரோக்கிய உணவு முறை கூட நல்ல உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எலும்பு தோல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை சனி என்ற எள்ளு எண்ணெய் குளியல் அவசியம் தேவை.

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com