திருமண யோகமற்ற ஜாதகங்கள்...!

திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகமும், ஒரே கணித முறையில் கணிக்கப்படவேண்டும்.
திருமண யோகமற்ற ஜாதகங்கள்...!

"கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்..." வாலிப பருவம் அடைந்த யாவருக்கும் பல கனவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் திருமணம். இந்த இனிமை சேர்க்கும் கனவு, கனவில் கண்டது போல் அனைவருக்கும் நடப்பதில்லை என்பது தான் உண்மை.

திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகமும், ஒரே கணித முறையில் கணிக்கப்படவேண்டும். அதோடு, ஜாதகருக்கு திருமண ப்ராப்தம், திருமண சந்தோஷ நிலை, திருமண துக்க நிலை எப்படி இருக்கிறது என கண்ட பின்னரே பொருத்தம் பார்க்க வேண்டும்.

அனைவருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் , அனைவருக்கும் சந்தோஷமான திருமணம் அமையும் என்பது 'ஜாதகத்தில் இல்லை' என்றால் என்னசெய்வது. குற்றங்களை மறைக்க, திருமண பொருத்தம் பார்ப்பது தவறு. குற்ற நிவர்த்திக்கு திருமண பொருத்தம் பார்ப்பது தான் சரி. ஜாதகரை சார்ந்தவர்களும், ஜோதிடரும் சேர்ந்து போராடினாலும் கூட, ஜாதகரின் கர்ம வினை வேலை செய்யும் என்பதனை யாரும் மறக்கக்கூடாது.

ஜோதிடத்தை, ஒருவருக்கு ஏற்படுத்தும் எச்சரிக்கை உணர்வாக மட்டுமே கருதலாம்.ஜோதிடம் ஒரு நல்ல வழிகாட்டிய தவிர, அதுவே நல்ல பயணம் ஆகாது என உணரவும்.

வேத ஜோதிடத்தில் திருமண யோகம் மற்றும் விவாகரத்து யோகம் என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. இவை இரண்டும் ஒரு நபரின் பிறப்பு ஜாதகத்தில், திருமண இன்பம் இல்லாததைக் குறிக்கிறது.

சுக்கிரன் தொடர்பான யோகங்கள் ( தோஷங்கள் - இன்றைய காலத்தில் , நாம் சொல்வது... ) பராசரர் அனைத்தையுமே யோகம் என்று தான் குறிப்பிடுகிறார்.

1. பலவீனமான சுக்கிரன்

2. அஸ்தங்க சுக்கிரன்

3. 8-வது வீட்டில் சுக்கிரன்

4. சில நேரங்களில் சுக்கிரன் 6 அல்லது 12 வது வீட்டில்

7ம் அதிபதி தொடர்பான யோகங்கள்

1. பலவீனமான 7ம் அதிபதி

2. 7-வது அதிபதி அஸ்தங்கம்

3. 8ம் வீட்டில் 7ம் அதிபதி

4. சில சமயங்களில் 7ம் அதிபதி 6வது அல்லது 12வது வீட்டில்

7ஆம் வீடு தொடர்பான யோகங்கள்

ஏழாவது வீட்டில் சனி, கேது, செவ்வாய் அல்லது சூரியன் போன்ற பாப கிரகங்கள் உச்சம் பெறுவது அல்லது தங்கள் சொந்த ராசியில் உள்ளது.

சனி, கேது, செவ்வாய் அல்லது சூரியன் போன்ற பாப கிரகங்கள் 7 வது வீட்டை உச்சம் பெற்று அல்லது தங்கள் சொந்த ராசியிலிருந்து பார்க்கின்றன.

பாப-கர்த்ரி யோகாவின் வலுவான செல்வாக்கின் கீழ் 7 வது வீடு.

இது தவிர, சர்வாஷ்டக வர்க்க முறையின் படி காணும் போது

7 ஆம் வீடு , 28 க்கும் குறைவான பரல்கள் பெற்றியிருப்பது, 7 ஆம் வீட்டு அதிபதி - நிற்கும் வீடும், 28க்கும் குறைவான பரல்கள் பெற்றிருப்பது.

களத்திர காரக கிரகம், ஆணுக்கு - சுக்கிரன் நிற்கும் வீடும், பெண்ணுக்கு - செவ்வாய் நிற்கும் வீடும், 28 க்கும் குறைவான பரல்கள் பெற்றியிருப்பது.

மேற்படி கூற்றுக்கு உட்பட்ட ஜாதகம் ஒருவருக்கு, அமையும் போது "திருமணமே இல்லாத நிலை" யை சொல்லும்.

சிலவற்றைப் பரிகாரம் மூலம் சரி செய்யலாம். பரிகாரம் என்பது ஜாதகரின் மற்றும் ஜாதகரை சேர்ந்தோரின் மனமாற்றமே தவிர, பரிகாரம் செய்தால் கிரக மாற்றம் அடையாது என்பதனை அறியவும்.

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com