ஆம்பூர் அருகே வற்றாத பொய்கையுடன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மேலும் அங்கு அதிசய தூக்குக் கல் பாறையும் உள்ளது.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளுக்கு இடையே உள்ளது தேன் மலைக்குட்டை எனும் சென்னப்ப மலை. ஆம்பூரிலிருந்து சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ள தேன்மலை குட்டை சென்றாயசுவாமி மலை என்று அழைக்கப்படுவதும் உண்டு.
சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இரட்டை மலை ஆம்பூர் வனச் சரகத்தில் உள்ளது.
எந்த மலைத்தொடரிலும் இணைப்பில் இல்லாமல் தனியாக உள்ள மலை இது. இந்த மலை பெருமளவு பாறைகளால் சூழப்பட்டுள்ளது. பாறை இடுக்குகளில் எங்கு பார்த்தாலும் தேனீக்கள் கூடுகள் கட்டி இருப்பதால் இந்த மலையை தேன் மலை குட்டை ( குன்று) என்று இப்பகுதி மக்கள் கூறுவர்.
இந்த மலையைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் பல்வேறு மூலிகை தாவரங்களும், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, புள்ளிமான், செந்நாய், ஓநாய், குள்ளநரி போன்ற விலங்கினங்களும் உள்ளன.
கிழக்குப் பகுதியில் உள்ள மலையின் மீது 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. பெருமாள் கோயிலின் எதிரே கிழக்குப் பகுதியில் எக்காலத்திலும் வற்றாத தீர்த்த குளம் உள்ளது.
வற்றாத தீர்த்த குளத்தை காணவும், பெருமாள் கோயிலில் வழிபடவும் கடல் மட்டத்தில் இருந்து 600 அடி உயரத்தில் உள்ள மலை மீது ஏறி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு விசேஷ பூஜைகள் செய்து, கோயிலின் எதிரே விளக்கு தூணில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
கோயிலின் எதிரே உள்ள வற்றாத தீர்த்தக்குளத்தின் அருகிலேயே இரட்டை தூக்குக்கல் பாறை உள்ளது.
இரண்டு பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ளது. பார்ப்பதற்கு கீழே விழுவது போல் தோன்றினாலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இது வரை கீழே விழாமல் உள்ளது. அதனால் அது அதிசய தூக்குக் கல் பாறை என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலையைச் சுற்றி வனத் துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், ஈட்டி,வேங்கை, காட்டுநெல்லி, புங்கன், பூவரசன், தான்றி, புளியமரக் கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

