
திருமலையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அவற்றை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என பிரித்து நடத்தி வருகிறது.
அதன்படி, திருமலையில் மாதந்தோறும் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அந்தந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ள நிலையில், இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
பட்டியல் விவரம்
ஏப்ரல் 11 - ஸமார்த்த ஏகாதசி
ஏப்ரல் 12 - பாஷ்யங்கார்கள் சாத்துமுறை
ஏப்ரல் 18 - அட்சய திருதியை, ஸ்ரீபரசுராம ஜயந்தி
ஏப்ரல் 21 - ஸ்ரீராமானுஜ ஜயந்தி
ஏப்ரல் 22 - ஸ்ரீராம ஜயந்தி
ஏப்ரல் 24-26 - பத்மாவதி ஏழுமலையான் திருக்கல்யாண வைபவம்
ஏப்ரல் 26 - மதத்ரய ஏகாதசி
ஏப்ரல் 28 - ஸ்ரீநரசிம்ம, தரிகொண்ட வெங்கமாம்பா ஜயந்தி
ஏப்ரல் 29 - ஸ்ரீகூர்ம, அன்னமாச்சார்யா ஜயந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.