உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து, மார்ச் 27-ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும், கொடியேற்றமும் நடைபெற்றது. மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாலை 4.15 மணி அளவில் உடுமலை நகரின் முக்கிய நபர்களுக்கு பரிவட்டம் கட்டுதல் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர், 4.30 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. கோயில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, கேரளத்தைச் சேர்ந்த யானை, தேரை முன்புறம் தள்ள தேர், தனது நிலையில் இருந்து 4.30 மணிக்கு கிளம்பியது. பின்னர் பழனி சாலை, தளி சாலை, வடக்குக் குட்டை வீதி, தல கொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை, பொள்ளாச்சி சாலை வழியாக மாலை 7.15 மணிக்கு தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தேர் சென்ற வழியோரங்களில் இருபுறமும் உடுமலை நகராட்சி சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் நீர்மோர்ப் பந்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்தத் தேர்த் திருவிழாவைக் காண உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், திரளான போலீஸார், ஊர்க் காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை ஒட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
குட்டைத் திடலில் வெள்ளிக்கிழமை இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


