செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ கோயில் புரத்தில்அமைந்துள்ள ஸ்ரீ வாருவேங்கடே பெருமாள் கோயில் வளாகத்தில் புதிதாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள 108 திவ்யதேச திருத்தலக் கோயில்களுக்கு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்தில் 108 திவ்யதேச எம்பெருமான்களையும் ஒரே தலத்தில் சேவிக்கும் வகையில், தனித்தனி சந்நிதானங்கள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிவுற்றன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு, கடந்த ஒருமாதமாக கோயில் ஸ்தாபகர் புண்ணியக்கோட்டி மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்டோர் திருப்பதி, ஸ்ரீரங்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட 108 வைணவ திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். அந்தந்த கோயில்களில் பூஜைகள் செய்து, ஆகம விதிமுறைகளை அறிந்து அதேபோல் மூல விக்ரகங்கள் உருவாக்கப்பட்டன.
கும்பாபிஷேக தினத்துக்கு முன்பாக, 108 திவ்ய தேச திருக்குடைகள் யாத்திரையானது பல்வேறு பகுதிகள் வழியாக வந்து ஞாயிற்றுக்கிழமை திருவடிசூலம் வந்தடைந்தது. அதனையடுத்து திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர், ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவர் திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், திங்கள்கிழமை காலை யாக சாலை புண்யாஹவாசனம், மஹா சாந்தி ஹோமம் உள்ளிட்டவையும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை விசேஷ ஹோமங்களும், புதன்கிழமை பிம்பசுத்தி திருமஞ்சனம், மகா சந்தி கலச திருமஞ்சனம் உள்ளிட்டவையும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, அனைத்து சந்நிதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில், திருக்கல்யாண உற்சவம், மங்களகிரி புறப்பாடும், இரவு அனுமந்த உற்சவமும் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 51அடி உயர தேவி ஸ்ரீ கருமாரியமனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், லியோ சுந்தரம், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



