திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை ரூ. 937 கோடியாக உயர்ந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டு செல்ல வசதியாக தேவஸ்தானம் 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மூலம் திருமலையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின், 1994 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்ரீவெங்கடேஸ்வர நித்ய அன்னதான அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. முதலில் திருமலை முடி காணிக்கை செலுத்தும் பகுதிக்கு எதிரில் அன்னதான கூடம் செயல்பட்டு வந்தது.
அதை 2011-ஆம் ஆண்டு, ஜூலை 7-ஆம் தேதி நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய அன்ன தான கூடம் ஏற்படுத்தப்பட்டது. அன்னதானத்துக்கு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்ட பின், பக்தர்கள் ஏராளமாக நன்கொடை வழங்கத் தொடங்கினர். 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 505 கோடியாக இருந்த அறக்கட்டளை நிதி 2017-18-ஆம் நிதி ஆண்டில் ரூ. 937 கோடியாக உயர்ந்துள்ளது. அதை வங்கியில் முதலீடு செய்துள்ள தேவஸ்தானம், அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் அன்னதானத்துக்கான செலவுகளை செய்து வருகிறது. ஒருவருக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்க ரூ. 25 செலவு செய்யப்படுகிறது.
தற்போது குறைந்தபட்சம் 100 பேர் முதல் அதிகபட்சம் லட்சம் பேருக்கு வரை அன்னதானம் வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் விசேஷ நாள்களில் இந்த அன்னதானத்தை வழங்கலாம். தேவஸ்தான இணையதளம் வாயிலாகவும் தற்போது அன்ன தானத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது.
திருமலையில் உள்ள அன்னதானக் கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகள், திருமலையில் பக்தர்கள் கூடும் முக்கிய சந்திப்புகள், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், நடைபாதை மார்க்கங்கள் உள்ளிட்ட இடங்களில் தினந்தோறும் காலை, மாலை பொங்கல், உப்புமா, சட்னி, காபி, தேநீர், பால் உள்ளிட்டவையும், மதியம் மற்றும் இரவு வேளைகளில் சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், கூட்டு உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. கை குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்பட்டு வருகிறது.
தினந்தோறும் திருமலையில் 10 ஆயிரம் லிட்டர் பால் செலவிடப்படுகிறது. தேவஸ்தானம் தொடங்கிய அன்னதான அறக்கட்டளைக்கு வியாழக்கிழமையுடன் 33 வயது முடிவடைகிறது. கடந்த 33 ஆண்டுகளில், 2 ஆயிரம் பேருடன் தொடங்கப்பட்ட அன்ன தான திட்டம் மூலம் தற்போது, 1.5 லட்சம் பக்தர்கள் உண்டு வருகின்றனர். உற்சவ நாள்களில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


