விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருப்பதி: படியேறி வந்த பசு மாடு!: பக்தர்கள் வியப்பு

திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு பசு மாடு திருமலைக்கு நடைபாதை வழியாக படியேறி வந்தது பக்தர்களிடையே வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:10 pm

திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு பசு மாடு திருமலைக்கு நடைபாதை வழியாக படியேறி வந்தது பக்தர்களிடையே வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருமலைக்கு நடைபாதை வழியாக இதுவரை பக்தர்கள் மட்டுமே நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு பசு மாடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள அலிபிரியில் இருந்து நடைபாதை வழியாக நடந்து படியேறியது. ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த சனிக்கிழமை அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. நடைபாதை வழியாக வந்த பக்தர்கள் பசு ஒன்று அதே வழியாக வருவதை கண்டு வியப்படைந்தனர். நடந்து செல்லும் பக்தர்களுக்கு அது ஊறு விளைக்கும் என்று நினைத்து அதை விரட்டினர். எனினும், அந்த மாடு விலகிச் செல்லாமல் நடைபாதையில் தொடர்ந்து மேலே ஏறியது. அது உடன் வந்த பக்தர்களுக்கும் எவ்வித தீங்கும் விளைக்கவில்லை. 
இதைக் கண்ட பக்தர்கள் அவ்வாசாரிகோணே பகுதியில் உள்ள கண்காணிப்பு ஊழியர்களிடம் இது தொடர்பாக தகவல் அளித்தனர். கண்காணிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, அந்தப் பசுவைப் பாதுகாப்பாக நடைபாதை வழியாக அழைத்து வந்து திருமலையில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.