சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயியின் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :

காஞ்சிவாக்கம் முத்துமாரியம்மன் கோயியின் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் காஞ்சிவாக்கம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 26ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விளக்கு பூஜையும், அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. 
இதையடுத்து சனிக்கிழமை அம்மன் திருவீதி உலாவும், பதி பூஜையும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை கரகம் சுற்றுதல், கூழ்வார்த்தல் நடைபெற்றது. இதையடுத்து இரவு தீ மிதித் திருவிழா நடத்தப்பட்டது. இதில் மாலை அணிந்து 200-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
விழாவில் காஞ்சிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழு உறுப்பினர் பனப்பாக்கம் ரவி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
கடும்பாடி அம்மன் கோயில்...
 சென்னை மாதவரம் அருகே, ஸ்ரீதேவி நவசக்தி கடும்பாடி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாதவரம் பொன்னியம்மன்மேடு பட்டேல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி நவசக்தி கடும்பாடி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழா மற்றும் 2-ஆம் ஆண்டு தீமிதி விழாவுக்கு, கோயில் நிர்வாகி சி.எஸ்.எஸ்.டி.சீனிவாசன் தலைமை வகித்தார். கோயில் தர்மகத்தா ஜி.சொக்கலிங்கம், சி.கிருஷ்ணவேணி, சி.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆடித்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) காலை கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் இருந்து சிவசக்தி கரகம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
இதையடுத்து, சனிக்கிழமை அம்மனுக்கு நவசக்தி யாகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பராமஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு கன்னியர்களுக்கு பொங்கலிட்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர், அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ரவி, சித்ரா, குமார், துளசி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில், செங்குன்றம், புழல், மாதவரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆற்பாக்கம் எல்லையம்மன் கோயிலில்...
 ஆற்பாக்கம் எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டத்துக்குட்பட்ட ஆற்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்காப்பு விழா விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். 
அதன்படி, 26ஆம் ஆண்டு ஊஞ்சல் சேவை, தீமிதித் திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. அப்போது, 108 பால்குடம், கங்கை தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தீமிதித் திருவிழா நடைபெற்றது. அப்போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் தீமேடை அமைக்கப்பட்டது. பின்பு, ஆற்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். கோயில் வளாகத்தில் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. தெருக்கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். 
செங்கல்பட்டு ஓசூரம்மன் கோயிலில்...
 செங்கல்பட்டு பெரியநத்தம், காஞ்சிபுரம் ஹைரோடு பகுதியில் உள்ள ஓசூரம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி கூழ்வார்த்தல் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 29ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு பந்தக்கால் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி, பெரியநத்தம் சேப்பாட்டியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்து, பாலாபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை புனிதநீர் திரட்டி கரக ஊர்வலம் நடத்தப்பட்டது. அன்று மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
விழாவையொட்டி ஓசூரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் ரதத்தில் புறப்பட, வீதி உலா வாண வேடிக்கையுடன் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக திங்கள்கிழமை அதிகாலையில் கோயிலை வந்தடைந்தது. அன்று காலை கும்பமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், பெரியநத்தம் கிராமத்தினர் மற்றும் செங்கல்பட்டு பெரியநத்தம் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.