ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

21-இல் பவித்ரோற்சவம் தொடக்கம்: ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On :


திருமலையில் வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் அறிந்தும் அறியாமல் செய்யும் தவறுகள், கைங்கரியங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய இந்த பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 
மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த பவித்ரோற்சவத்தின் முதல் நாள் பவித்ர பிரதிஷ்டை, 2-ஆம் நாள் பவித்ர சமர்ப்பணம், 3-ஆம் நாள் மகாபூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இந்த 3 நாள்களும் உற்சவ மூர்த்திகள் மாலை வேளையில் மாடவீதியில் வலம் வருவர். இந்த உற்சவத்தையொட்டி, தேவஸ்தானம் வரும் 20-ஆம் தேதி வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை, வரும் 21 முதல் 23-ஆம் தேதி வரை அஷ்டதள பாதபத்மாராதனை, சகஸ்ர கலசாபிஷேகம், திருப்பாவாடை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
78,972 பக்தர்கள் தரிசனம்
 ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 78,972 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 30,241 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
தற்போது தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை நேர ஒதுக்கீடு முறை பக்தர்கள் 4 மணிநேரமும், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 20 மணிநேரத்திற்கு பின்பும் தரிசனம் அளிக்கப்பட்டது.
பக்தர்கள் 25 காத்திருப்பு அறைகளில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் 4 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.