

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருகிற 11-ம் தேதி ஆடி அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் 3 மணிக்கு கோயில் மூலஸ்தானம் திறக்கப்பட்டும் அபிஷேகம், ஆடி களபபூஜை, உஷபூஜை உள்ளிட்டவை நடைபெறும். இந்தப் பூஜைகள் நடைபெறும் போது பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும்.
ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.