கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றன. இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயமானது பசலிக்கா அந்தஸ்து பெற்றதாகும். இந்த பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு ஆகியவை சிறப்புப் பெற்றது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவு பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மறையுரை மற்றும் கூட்டுத் திருப்பலியுடன் தொடங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகளின்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், கொங்கணி ஆகிய மொழிகளில் கூட்டுத் திருப்பலிகள் நடைபெற்றன. தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடியற்காலை விண்மீன் ஆலய வளாகத்தினுள் குழந்தை இயேசுவின் சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.
குழந்தை இயேசுவின் சொரூபத்தை வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், காட்சிப்படுத்தினார். தொடர்ந்து, குழந்தை இயேசு சொரூபத்துக்கு பக்தர்கள் முத்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பலிகளில் பங்குத் தந்தையர்கள், உதவி பங்குத் தந்தையர்கள், மதகுருமார்கள் பங்கேற்றனர்.
பக்தர்களின் கூட்டுப்பாடல் திருப்பலியும், இயேசு கிறிஸ்து பிறப்பை சித்திரிக்கும் நாடக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த வழிபாடுகளில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, புனித ஆரோக்கிய அன்னை பேராலய கோபுரங்கள், பழைய மாதா ஆலயம் உள்ளிட்ட இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இப்பண்டிகையையொட்டி, வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



