மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியெல்லாம் வரும்!

ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு படுத்துக்கொண்டு,
மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியெல்லாம் வரும்!
Published on
Updated on
1 min read

ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு படுத்துக்கொண்டு, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர்.

அங்கிருந்த ஒருவர், ‘மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியெல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே’ என்று கதறி அழுதார்.

மகா பெரியவாளும் மனுஷா தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதற்குண்டான பலாபலன்களை இந்தச் சரீரம் அனுபவித்து தானே ஆகணும்’ என்று கூறினார். சற்று நேரத்தில் வலி குறைந்து தெளிவடைந்தார் பெரியவா.

அங்கிருந்த மடத்து யானை பெயர் காமாட்சி. தீப நமஸ்காரம் முடிந்து மகா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மகா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால், சிறுவாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்தபடி நின்றிருந்தார்.

பெரியவா விடாமல், ‘காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ’ என்று மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்பமுடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து, பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது.

‘பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணம் இந்த அதிசயம் நிகழ்ந்தது! என்னே அவரது திருவிளையாடல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com