புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமேஸ்வரத்தில் புனித நீராட இனி காத்திருக்க வேண்டாம்: வந்துவிட்டது புதிய முறை

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் புனித நீராட வரும் பக்தர்கள் இனி மணிக்கணக்காகக் காத்திருக்க தேவையில்லை.

News image
Updated On :17 பிப்ரவரி 2018, 10:56 am

தினமணி

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் புனித நீராட வரும் பக்தர்கள் இனி மணிக்கணக்காகக் காத்திருக்க தேவையில்லை. புனித நீராட இணையத்தில் பதிவு செய்யும் புதிய திட்டத்தைக் கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற இராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்குப் புனித நீராடுவது விசேஷம். அந்தவகையில், கடல் அக்னி தீர்த்தம் மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகின்றது. தினமும் சுமார் 50 ஆயிரத்திற்குமான பக்தர்கள் புனித நீராடிச் செல்கின்றனர். 

இந்நிலையில், புனித நீராட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அறநிலைத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் பரிசீலனை செய்து இணையம் மூலம் புனித நீராடுவதற்கான டிக்கெட் வழக்கும் திட்டத்தை புதிதாகக் கொண்டுவந்துள்ளது. இனி, கோயிலில் நீராட விரும்பும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

ஆன்லைன் மூலம் http://www.rameswaramtemple.tnhrce.in/index.html என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து நகல் எடுத்து நேரடியாக கோயிலில் காண்பித்து புனித நீராடலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.