கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி முன்பு குருபெளர்ணமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆதியோகியான சிவன் யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே குரு பெளர்ணமி. மனிதனின் உள்நிலை மாற்றத்திற்கு இந்த குரு பௌர்ணமி நாள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. யோக பாரம்பரியத்தில் சிவனை கடவுளாக வணங்குவதில்லை. சிவனை ஆதியோகியாகவும் ஆதிகுருவாகவும் பார்க்கிறோம்.
ஆதியோகியிடமிருந்து தான் யோகா முதன்முதலில் தோன்றியது. சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் ஆதியோகியான சிவனிடமிருந்து பெற்ற யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுடன் யோக அறிவினை பகிர்ந்து கொண்டார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து யோக அறிவினை பகிர்ந்து கொண்டதால் அந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
இதன்காரணமாக, ஈஷா யோகா மையம் சார்பில் குரு பெளர்ணமி தினம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாட்டபட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு குரு பெளர்ணமி தின விழா கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள 112 அடி ஆதியோகி முன்பு நேற்ளு நடைபெற்றது.
இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்களின் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. மேலும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சி, கேள்வி – பதில் நிகழ்ச்சி, நள்ளிரவு கூட்டு தியானம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த குரு பெளர்ணமி விழாவில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காலையும் மாலையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவில்லை! பாஜக அறிக்கை

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

