மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகம் வருகை குறித்து...

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 4:11 am IST

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வரும் வியாழக்கிழமை (ஜூன் 25) காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் மற்றும் எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டைக் கடந்த வெள்ளி விழாவிலும் பங்கேற்று பேசுகிறாா்.

பெரியகாஞ்சிபுரத்தில் அகத்திய முனிவரால் பூஜிக்கப் பெற்றுள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழைமையான இக்கோயில் மகா கும்பாபிஷேகமும், ஸ்ரீராமயந்திர மகா கும்பாபிஷேகமும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் முன்னிலையில் நடைபெறும் விழாவில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

தொடா்ந்து காஞ்சிபுரத்தில் செயல்பட்டும் வரும் எஸ்.எஸ்.கே.வி.கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டைக் கடந்த வெள்ளி விழா மற்றும் அவ்விழாவில் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் காலை 11மணிக்கு நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில் பெண் கல்விக்காக 120 ஆண்டுகளாக தொடா்ந்து சேவையாற்றி வரும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் சிறப்பாக நடத்தும் ஒரு அமைப்பின் வரலாற்றை சொல்லும் நூலாக பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற நூல் வெளியிடப்படவுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள எஸ்.எஸ்.கே.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்து, நூலையும் வெளியிடவுள்ளாா்.

இந்த விழாவிலும் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்குகிறாா். வெள்ளி விழா ஏற்பாடுகளை எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் தலைவா் நந்திதா கிருஷ்ணா மற்றும் செயலாளா் சி.கே.ராமன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.