விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும்!

செவ்வாய்க்கு அதிபதியான விருச்சிக ராசியில் வரும் விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும்!
Published on
Updated on
1 min read

செவ்வாய்க்கு அதிபதியான விருச்சிக ராசியில் வரும் விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் என்றதும், பயந்து நடுங்க தேவையில்லை. இன்றைய நாளில் செய்யும் பணிகள் அனைத்தும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும். 

முதலில் சந்திராஷ்டமம் என்றால் என்னவென்று பார்ப்போம்

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம். இவ்வாறு சந்திரன் நிலைபெறும் காலம் இரண்டே கால் நாள்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது எட்டாமிடத்தையும் குறிக்கும்.

சந்திரனை "மனோகரன்' என்றும் போக்குவரத்துக்குக் காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடைய கிரகம். அந்த மனோகரன் 8-ல் மறையும்போது மன உளைச்சல், கோபம், ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற எதிர்மறையான குணங்களைத் தருவார். இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்திராஷ்டமம் என்பது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் ஒரு சிறு தோஷம். உதாரணமாக, ஒருவருக்கு விருச்சிக ராசி ஜென்ம ராசி என்றும், அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும் அமைந்துள்ளது என்றால், விருச்சிகத்துக்கு 8-ஆம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். வேறொரு ஜோதிட கணிதப்படி, குறிப்பிட்ட ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 17-வது நட்சத்திரம் முதல் உள்ள காலம் சந்திராஷ்டமம் ஆகும்.

சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ள எளியப் பரிகாரம்

காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு மூன்று முறை வலம் வந்து, பின்பு அன்றாடம் பணிகளை செய்ய துவங்கலாம்.

சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவைத் தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும்.

அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும் நன்று. குலதெய்வ வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் சிறந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com