வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசையான இன்று புதிய காரியங்களைத் தொடங்கலாமா?

வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசை இன்று. புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து..
வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசையான இன்று புதிய காரியங்களைத் தொடங்கலாமா?
Published on
Updated on
1 min read

வைகாசி மாதத்தின் கடைசி அமாவாசை இன்று. புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நல்ல பலனை கொடுக்கும். என்று நம்புகிறார்கள். அமாவாசைக்குப் பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம்.

சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்யக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அது சரியல்ல.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷண சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால், மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல. ஆனால் புதிய காரியங்களைத் துவங்குதல் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.

அமாவாசையன்று முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபடலாம். இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்.

• குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

• அமாவாசையன்று வீட்டு வாசலில் முக்கியமாகக் கோலம் போடக் கூடாது. ஏன்? அவ்வாறு செய்யக்கூடாது? 

நமது முன்னோர்கள் பூமியை நோக்கி வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது. முன்னோர்கள் தானே வீட்டிற்கு வந்தால் என்ன? என்பார்கள் சிலர். வரலாம்...தவறில்லை....ஆனால், இறந்தவர்களாக இருப்பதினால் அவர்கள் வரும் போது ஏற்படும் ஒருவித அதிர்வலைகள் சிலவித பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவே தான் இவ்வாறு சொல்லப்படுகிறது.

• அன்றைய தினம் மிகக் கடினமான வேலைகள் உடல் ரீதியான வேலைகள் எதுவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யும் போது தவறி அடிப்பட்டால் ரத்தக் காயம் ஏற்படும். அடிப்பட்ட வீரியம் அதிகமாக இருக்கும் சீக்கிரம் ஆறாது.

• அமாவாசையன்று பதட்டமும், கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். அமாவாசையன்று மௌன விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. உங்களை நீங்களே உணர வைப்பதற்கான விரதமாய் மௌன விரதம் இருக்கும்.

• அன்றைய நாள் உங்களால் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்வது ஐஸ்வர்யத்தை பெருக்கும். தேவையற்ற முடிவுகளை அமாவாசையில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com