திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதற்காக, இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 8.30 - 9.00 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்றிரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj

இன்றுவரை பாக்யராஜை நினைத்து மேக்கப் போடும் ஊர்வசி!

மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதிச் சான்றிதழ்: அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்






