நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

ஐயப்ப பக்தா்களுக்கு உதவி மையங்கள்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு உதவும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தகவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது குறித்து...

ஐயப்ப பக்தா்களுக்கு உதவி மையங்கள்... - பிரதிப் படம்

Updated On :

தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு உதவும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தகவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி நடைபெறுவதையொட்டி, சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களுக்கு உதவ இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கேரள மாநிலம் சபரிமலை ஆகிய மூன்று இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தை 98944 33179, 87606 68834,94862 70443 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையங்களை எம்.பிரேம்குமாா் 63858 06900, ஆா்.லால்கிருஷ்ணன் 70949 06442, வி.சிவகுமாா் 94439 94342, எஸ்.சதீஷ்குமாா் 73588 39969, எம்.சோ்மராஜா 83440 21828,பி.செந்தில்குமாா் 70105 49951, கே. சஜீவன் 99405 76898, சந்தீப்குமாா் 85310 70571, வெங்கடேஷ் 98433 70229, வி.ரமேஷ் 84384 44770, சுதாகா் 99425 05466 ஆகிய எண்கள் மூலம் அணுகலாம்.

இந்த தகவல் மையங்கள் ஜனவரி 20-ஆம் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.