பூரட்டாதி நட்சத்திரத்தின் ராசி கும்பம் மற்றும் மீனத்தில் வரும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் ராசி அதிபதி (கும்பம்) சனி. பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் ராசி அதிபதி (மீனம்) குரு ஆவார்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்கள்
சில சமயம் சமாதானப் பிரியர். பலசமயம் சண்டை பிரியர்கள் இவர்கள். செய்கை எப்போதும் விநோதமாக இருக்கும். மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கும்.

கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருந்தாலும், அடிக்கடி சஞ்சலத்திற்கு உள்ளாவதுண்டு. சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் இருக்காது, தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்யும் மனப்போக்கு உள்ளவர்கள். இவர்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு எப்படியும் வந்துவிடும். தேவைக்கு அதிகமாகத் தேடி அலைகிற குணம் இல்லை. இவர்கள் பிறவி புத்திசாலியாக இருப்பதால் எந்த வேலையில் இருந்தாலும் பிரகாசிக்க கூடியவர்கள்.
அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும் கவரக்கூடியவர்கள். எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்ட இவர்கள், எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள். வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்கள். எண்ணிய செயலை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.

வாதம் செய்வதில் வல்லவர்களான இவர்கள் யாரேனும் வசைச் சொற்களை பேசினால் பொங்கி எழுந்துவிடுவர். கல்வி வேள்வியில் ஞானம் உள்ள இவர்கள் எழில் உடையவர்கள். ஆன்மிக ஈடுபாட்டில் விருப்பம் கொண்டவர். பிறரின் மனதை அறிந்து செயல்படக்கூடியவர்கள். எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடிய குணம் கொண்டவர்.
இந்த நட்சத்திரத்திரகாரர்ளுக்கு குழந்தை பிறந்த பிறகு, அப்பாவின் அந்தஸ்து அதிகரிக்கும். இவர்கள் இளமைக் காலம் தொட்டே வளர்ச்சிப் பாதையில் பயணிப்பார்கள். 25 முதல் 30 வயது வரை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். பின் 40 வயதுக்கு மேல் பொன்னான காலமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பும் இருக்கும். உதாரண தம்பதிகளாக இருப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினி 173-வது படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



