பொதுவாக வட அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் சால்மன் மீன்களின் வாழ்க்கை சுழற்சி மிக அற்புதமானதாக உள்ளது. அதிக சத்துகள் இருப்பதால் சால்மன் மீன்கள் பற்றி மக்கள் அதிகம் பேசினாலும், அவை வலசை செல்லும் மீன்கள் என்பது ஆச்சரியத் தகவல்.
பசிபிக், அட்லாண்டிக் கடற்கரைகளில் சால்மன் மீன்கள் காணப்படுவதால், இவை குளிர் நீரில் வளரும் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 4 டிகிரி செல்சியஸ் முதல் 15 டிசிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்ட குளிரான நீரில்தான் வாழ முடியும் என்பதால் மற்ற பகுதிகளில் இவை அதிகம் காணப்படுவதில்லை.
பெரும்பாலும் இந்திய கடலோரப் பகுதிகளில் இந்த வகை மீன்கள் தென்படுவதில்லை. இவை இறைச்சிக்கு நிகரான புரதத்தைக் கொண்டிருப்பதால் அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாகவும் உள்ளது.
இந்திய சால்மன் என்று விற்பனை செய்யப்படும் மீன் வகைகளுக்கும் உண்மையான சால்மன் மீன்களுக்கும் எந்த பரம்பறை ஒற்றுமையும் கிடையாது. பங்காளிகளும் கிடையாது. இந்தியாவில் காலா மீன், கிழங்கான் மீன் போன்றவை இந்திய சால்மன் மீன்கள் எனப்படுகின்றன. இதில்லாமல், இதே சத்துகள் அடங்கிய சில வகை மீன்களை இந்திய சால்மன் என்றே பெயரிட்டு விற்பனை செய்கிறார்கள்.
இதன் சதைப்பகுதி மற்ற மீன்களைப் போல் வெண்மையாக அல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுவதால் வேறு எந்த மீன் வகையையும் சால்மன் என்று கூற முடியாமல் இருப்பதே இதன் தனிச் சிறப்பு.
வலசை செல்லும் சால்மன்
சால்மன் மீன்கள், குளிரான கடலில் வாழ்ந்தாலும், அவை குஞ்சுபொரிக்க வலசை செல்வது வழக்கம். கருவுற்ற மீன்கள், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வலசை புறப்படுகின்றன. மிகவும் சுத்தமான நன்னீர் ஓடைகள், ஆறுகளை அவை அடைந்து, குஞ்சு பொரிக்க ஏற்ற, பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன.
பிறகு நதிகளிலும் ஓடைகளிலும் சால்மன் மீன்கள் குஞ்சுபொரித்துவிட்டு உயிரை இழக்கின்றன. சால்மன் குஞ்சுகள் மீனாக வளர்ந்து அவை மீண்டும் தங்களது தாயகம் தேடி பல கிலோ மீட்டர் பயணித்துத்தான் கடலை அடைகின்றன. கடல் வாழ்க்கையை நிறைவு செய்துகொண்டு மீண்டும் அவை குஞ்சுபொரிக்க நன்னீரைத் தேடி வலசைப் புறப்படுகின்றன.
சால்மன் மீன்களுக்கு கடல் வாழ்க்கை, நதி வாழ்க்கை என இரண்டு இருக்கும். அவை எங்கே இருக்குமோ அதற்கேற்ப அவற்றின் உடல்களை தகவமைத்துக் கொள்கின்றன. தோற்றமும் மாறுகின்றன.
அது மட்டுமல்ல, அட்லாண்டிக் சால்மன் மீன்கள் கிட்டத்தட்ட ஒரு மீன் 50 கிலோ வரை எடை இருக்குமாம். இதன் ஆயுள்காலம் 10 முதல் 13 ஆண்டுகள் என்கிறார்கள். பசிபிக் சால்மன் மீன்கள் அதிகபட்சம் 10 கிலோ எடையில், 8 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டிருக்கின்றன.
சால்மன் மீன்களில், அதன் இருப்பிடம், வாழ்விடம், புறத்தோற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 10 வகைகளில் பிரிக்கிறார்கள். கடலில் பிடிக்கப்படும் சால்மன்களுக்கு அதிக விலை கிடைக்கின்றன. ஏற்றுமதியும் நடக்கிறது. ஆறுகளில் பிடிக்கப்படும் சால்மன்களை உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள்.
ஆறுகளில் வாழும் சால்மன் வகை மீன்கள், மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் கட்டுமானப் பணிகள், கழிவுகள் கலப்புகளால் அழிந்து வருகின்றன.
இந்தியாவில் சால்மன்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது, சால்மன் மீன்களைப் போன்றே, ஆனால் இந்திய சூழலில் வளரக்கூடிய டிரௌட் மீன்கள் கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன. முதலில் பிரிட்டனில் உள்ள டிரளட் மீன்களை இங்கே கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், பிறகு காஷ்மீரில் உள்ள நீர்நிலைகளில் அவை வளர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
Summary
The life cycle and migratory journey of the salmon!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்

சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?

குளச்சலில் அதிகரித்த நெத்திலி மீன் உற்பத்தி

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




