கும்ப ராசிக்கு நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் பொற்காலம் இது!

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கும்ப...
கும்ப ராசிக்கு நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் பொற்காலம் இது!
Published on
Updated on
1 min read

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கும்ப ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

கும்பம் (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)

ராசியதிபதி சனி 11ல், இரண்டு, பதினொன்றாம் வீட்டு அதிபதி குரு 10-ம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இது ஒரு யோகமான கிரக நிலை. ராசியதிபதி 11-ல் இருப்பதால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். எதிர்ப்புக்களை மிகச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் நடுவில் மிக்க மரியாதையுடனும், செல்வாக்குடனும் இருப்பீர்கள். 

இரண்டாம் வீட்டிற்குடைய குரு 10-ல் இருப்பதால் உங்கள் பொருளாதாரம் மிகச் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரையில் இருந்து வந்த பிணக்குகள் மற்றும் மன வேற்றுமைகள் முற்றிலுமாக 

அகன்று விடும். கடனுபாதைகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.  

ஸ்திர சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவோருக்கு இது அனுகூலமான காலம். குருபார்வை 4-ம் இடத்திற்குக் கிடைப்பதால் அவர்கள் எண்ணப்படியே வீடு கட்ட முடியும். வீடு கட்டுவதற்குக் கடனுதவியும் கிடைக்கும். நினைத்ததைவிடசற்றுப் பெரிதான வீடே கட்டலாம்.  

குடும்பஸ்தானமான 2-ம் வீட்டிற்குக் குரு பார்வை இருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு ஒன்றும் குறைவில்லை. மகப் பேற்றை எதிர்நோக்கியவர்களுக்கு நிச்சயமாகக் குழந்தைப் பேறு உண்டாகும். அதே சமயத்தில் 5-ம் வீட்டிற்கு சனியின் பார்வை இருப்பதால் சற்றுத் தாமதமாகும். சிற்சில உபாதைகள் இருந்து வரும். ஆகத் தக்க மருத்துவ உதவியுடன் இருந்து வந்தால் நிச்சயமாக குழந்தைப்
பேறு உண்டாகும்.

வேலை வேட்டையில் இருப்போருக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுக்கும். 2-ம் வீட்டு அதிபதி குரு 10-ல் இருப்பதால் வேலை உடனே கிடைக்கும். 6-ம் வீட்டிற்கும் குருவின் பார்வை இருப்பதால் நிம்மதியாக உங்கள் வேலை வேட்டையைத் தொடருங்கள். வெற்றி உங்களுக்கே.

வியாபாரிகளுக்கு: அவர்களுக்குக் குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் ஜெனன ஜாதகத்தில் நல்ல தசா புக்திகளாக இருப்பின் அவர்கள் வியாபாரத்திற்குக் குறைவில்லை. உயர்வே கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் இருந்து வந்த அசாதாரண சூழல் இனி இருக்காது. நல்ல சுமூகமான நிலையே இருந்து வரும். மேலதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும். பதவி உயர்வுக்குக் காத்திருப்போருக்கு அது கிடைக்கக் கூடிய சூழல் இருந்து வரும். ஜனன ஜாதகத்திலும் உத்தியோகத்திற்கு ஆதரவான காலம் இருந்தால் அவர்களுக்கு இது பொற்காலமே. 

*****

கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com