மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தேவகிக்கும்-வசுதேவருக்கும் பிறக்கும் குழந்தையால் அண்ணன் கம்சன் உயிருக்கு ஆபத்து என்று கம்சனின் கனவில் அசரீரி ஒன்று ஒலித்ததாம். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கம்சன் தன் உயிர் முக்கியமா, தங்கை மீதான பாசம் முக்கியமா? என்று வரும் போது இறுதியில் தன் உயிர் தான் முக்கியம் என்று முடிவு செய்தான். உடனே தேவகியை கொன்றுவிட முடிவு செய்தான் கம்சன்.
வாளை ஓங்க முற்பட்டான். கம்சா! நிறுத்து தேவகிக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு! என்று மனைவியின் மீதான பாசத்தால் அவனிடம் மன்றாடிக் கேட்டு கொண்டார் வசுதேவர்.
அதன்பின் தேவகியை கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டான் கம்சன். ஆனால் இருவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
தேவகிக்குப் பிறந்த குழந்தைகளைத் தொடர்ச்சியாக கொன்று புதைத்தான் கம்சன். தொடர்ந்து 8-வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்தக் குழந்தையும் தன் அண்ணன் கையால் மடியப்போகிறதே என்று எண்ணி, கலங்கினால்.
தேவகிக்கு ஒரு நள்ளிரவு நேரத்தில் எட்டாவது குழந்தை பிறந்தது. அழகான ஆண் குழந்தையை கண்டதும் தேவகிக்கும் வசுதேவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. மறுகணமே அந்தக் குழந்தை மகா விஷ்ணுவாக உருவெடுத்துப் பேச தொடங்கியது. தங்களின் முற்பலனால் நான் உங்களின் மகனாகப் பிறந்துள்ளேன்.
என்னைக் கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.
சிறை வாசல் உடைந்து பெண் குழந்தையைக் கொண்டு வந்து தேவகியிடம் சேர்த்தார் வசுதேவர். விஷயம் தெரிந்து காலையில் வந்து பார்த்த கம்சன் பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். எப்படியோ அதை அழித்துவிட வாளை ஓங்கினான் கம்சன், அந்தக் குழந்தை துர்க்கையாக வடிவெடுத்து ஏ! கம்சா உன்னைக் கொல்லப்போகிறவன் பத்திரமாக உள்ளான் என்று கூறி மறைந்தது. உரியக் காலத்தில் கம்சனை அழித்து மக்களைக் காப்பாற்றினார் கண்ணன்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமான தேய்பிறை அஷ்டமி திதியை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


