வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

வாஸ்துப்படி உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க இதைச் செய்து பாருங்களேன்! 

நாம் என்னதான் விழுந்து விழுந்து பணம் சம்பாதித்தாலும், அந்த பணம் நீண்ட காலம் நம் கையில்..

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாம் என்னதான் விழுந்து விழுந்து பணம் சம்பாதித்தாலும், அந்த பணம் நீண்ட காலம் நம் கையில் தங்குவதில்லையே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. 

இதற்கு என்ன காரணம் என்று முதலில் சிந்திக்க வேண்டும்? வாஸ்துப்படி நாம் குடியிருக்கும் வீட்டில் ஏதேனும் குறை இருக்குமோ? என்று ஆராய்ந்து பார்க்கலாம்.

பணத்தட்டுப்பாடு நீங்க வாஸ்துப்படி சரியான முறையைப் பின்பற்றினால் வாழ்வில் கட்டாயம் உயரலாம். அது என்னவென்று செய்து தான் பார்ப்போமே..

• வீட்டில் பணப்பற்றாக்குறையை போக்க ஒவ்வொரு வியாழனன்றும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர பணத்தட்டுப்பாடு நீங்கும். செல்வம் கொழிக்கும். 

• பணம் அதிகமாக கைமாறும் காரியம், அதாவது ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களுக்குச் செல்லும்போது சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். இந்த நிறத்தில் உடைகள் இல்லையெனில், இந்த நிறத்தில் இருக்கும் கைக்குட்டையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால், போன காரியம் உங்களுக்குக் கைகூடும். 

• பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்து உங்களைச் சேரும். 

• ஓடும் வெள்ளைக் குதிரை படம், ஜோடி கழுதைப் படம் அடிக்கடி பார்க்க பணம் அதிகமாக சேரும். 

• ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர தன ஆகர்ஷணமாகும். 

• வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். 

• உங்கள் வீட்டு கிழக்குப் பகுதியில் சில்லறைக் காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். பானை நிறைய சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் வைக்கவும். ஆனால், நீங்கள் வைக்கும் பானை எவருக்கும் தெரியாமல் இருந்தால் நன்று. 

இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. இதையெல்லாம் ஒருமுறை கடைப்பிடித்து தான் பாருங்களேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.