திருப்பதிக்கு கைக்குழந்தைகளோடு செல்பவர்களுக்கு மட்டும்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின்..
திருப்பதிக்கு கைக்குழந்தைகளோடு செல்பவர்களுக்கு மட்டும்!
Published on
Updated on
1 min read

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனத்தை வழங்கி வருகிறது.

அந்தவகையில், பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள் மற்றும் பிப். 20-ம் தேதி கைக் குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

வரும் பிப்.19-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது. 

அதேபோல் பிப். 20-ம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com