பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பட்டஞ்சேரியில் உள்ள அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

News image

அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 

Updated On :26 பிப்ரவரி 2019, 2:35 am IST

பட்டஞ்சேரியில் உள்ள அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தமேரூரை அடுத்த பட்டஞ்சேரியில் அகோர காளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இக்கோயிலை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
இதையொட்டி, கடந்த 2 நாள்களாக கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி, தன, கோபூஜைகள், முதலாம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்த பின் மேளதாளங்களோடு, வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டு, புனித நீர் கொண்டு வரப்பட்டது. பிறகு, கோயில் கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அதையடுத்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 
இந்த விழாவில் பட்டஞ்சேரி மற்றும்  அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பின்னர், இரவு வேளையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அகோர காளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கிராமத்தினரும் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.