திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை மாத உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதனால், ஆண்டுதோறும் அதே நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதற்காக பக்தர்கள் கேந்திப் பூக்களைத் தவிர மற்ற பூக்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



