
அத்திவரதர் பெருவிழாவின் தொடர்ந்து 23-வது நாளான இன்று அத்திவரதர் இளம் பச்சை வண்ணப்பட்டு உடுத்தி மகிழம்பூ மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த 22 நாட்களில் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை லேசான சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.
அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!
இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை சாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், திருக்கோயிலைச் சுற்றிக் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஐபி தரிசனத்துக்கு உரிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க உள்ளே அனுமதிக்கப்படுவர். நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்த்தின் குடும்பத்தினர் சாமி தரிசனம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.