அன்னதான திட்டத்திற்கு ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தமிழக..


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் ஆபூர்வ அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து, தொடர்ந்து 24-வது நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை காஞ்சிபுரம், அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ அத்திவரதரை தரிசனம் செய்தார். அதன்பின் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
மேலும், அத்திவரதரை தரிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் அன்னதான திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாயை அறநிலையத்துறைச் செயலரிடம், காசோலையாக வழங்கினார்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களும் அன்னதானத்திற்குப் பண உதவி செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
முதல்வருடன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பானர் டி.கண்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...